• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் கடன் கருத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து மேலதிக நிதியுதவியினைப் பெற்றுக் கொள்தல்
- COVID தொற்று காரணமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரதிகூலமான தாக்கங்களின் விளைவாக எழுந்துள்ள நிலைமைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக எடுக்கக்கூடிய நடவடிக்கைகளின் பொருட்டு அவசர ஆக்கக்கூறுகளுக்கான 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களும் அடங்கலாக 165 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் தொகையினை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதேபோன்று இந்த கடன் தொகைக்கு மேலதிகமாக வறுமையைக் குறைப்பதற்கான யப்பான் நிதியத்தின் கீழ் 1.25 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கொடையொன்றை வழங்குவதற்கும் உடன்பாடு தெரிவித்துள்ளது. அத்துடன், இரண்டாம் நிலைக் கல்வி துறைசார் மேம்பாட்டு கருத்திட்டத்திற்கு 400 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் தொகை யொன்றை ஆசிய அபிவிருத்தி வங்கியின் பெறுபேற்று அடிப்படையிலான கடன் வழங்கும் நிதி வழிமுறையின் கீழ் வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க குறித்த கடன்தொகை மற்றும் கொடையினை பெற்றுக் கொள்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் உரிய உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.