• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தின் ஆற்றலை விரிவுபடுத்தும் கருத்திட்டம்
- கொழும்பு துறைமுகத்தின் தெற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமானது 500 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் முதலீட்டின் கீழ் செயற்படுத்தப்பட்டதோடு, அதன் நிர்மாணிப்பு பணிகள் 2016 திசெம்பர் மாதம் 01 ஆம் திகதியுடன் பூர்த்தி செய்யப்பட்டு தற்போது வர்த்தக செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக Colombo International Terminal Limited கம்பனியானது இலங்கை முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தமொன்றைச் செய்துள்ளது. இந்த முனையத்தின் பணிகளுக்காக தற்போதுள்ள கேள்வி மற்றும் எதிர்கால வர்த்தக வாய்ப்புகள் என்பன பற்றி கவனத்திற்கு எடுததுக் கொண்டு, நிர்மாணிப்புகள் எதுவும் மேற்கொள்ளாது இந்த முனையத்தின் ஆற்றலை அதிகரித்து இந்தக் கருத்திட்டத்தை விரிவுபடுத்து வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, 90 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட முதலீட்டில் புதிய உபகரணங்களை அறிமுகப்படுத்துதல், தற்போது நிலவும் உபகரணங்களை விருத்தி செய்தல், நவீனமயப்படுத்துதல் என்பவற்றின் மூலம் இந்த முனையத்தின் வளவாய்ப்பை அதிகரிக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கும் திறமுறை அபிவிருத்திக் கருத்திட்ட சட்டத்திலுள்ள ஏற்பாடு களின் பிரகாரம் உரிய வரிச் சலுகை வழங்குவதற்கான ஒழுங்குவிதிகளை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.