• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசியலமைப்புக்கான இருபதாம் திருத்தம் தொடர்பான பாராளுமன்ற குழுநிலை சந்தர்ப்பத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உத்தேச திருத்தங்கள்
- அரசியலமைப்புக்கான இருபதாம் திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் 2020 செப்ரெம்பர் மாதம் 02 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இநத சட்டமூலம் சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற குழுநிலை சந்தர்ப்பத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரிப்புகள் நீதி அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், குறித்த பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அத்துடன், பின்வரும் விடயங்கள் சம்பந்தமான ஏற்பாடுகளையும் அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்த சட்டமூலம் தொடர்பிலான குழுநிலை சந்தர்ப்பத்தில் உள்வாங்க வேண்டுமென இந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

* உயர்நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றம் என்பவற்றில் நிலவும் அதிகமான வழக்குகளின் எண்ணிக்கையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த நீதிமன்றங்களின் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள்.

* தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த நிலைமைகளின் போது எழும் விடயங்களுக்குரிய சட்டங்களை மாத்திரம் அவசர சட்டங்களாக கருதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள்.

* அரசாங்க கூட்டுத்தாபனமொன்று அல்லது அரசாங்கத்தினால் அல்லது அரசாங்க கூட்டுத்தாபனமொன்றினால் 50 சதவீத பங்குகள் அல்லது அதற்கு மேலான விகிதாசாரத்தினைக் கொண்டுள்ள கம்பனிகளை கணக்காய்வு செய்யும் அதிகாரம் கணக்காய்வாளர் அதிபதிக்கு கையளிக்கப்படும் விததத்திலான ஏற்பாடுகள்.

* அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களின் எண்ணிக்கை மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை என்பவற்றை தீர்மானிப்பதற்குரியதாக அரசியலமைப்புக்கான பத்தொன்பதாவது திருத்தத்திலுள்ள ஏற்பாடுகளை அவ்வாறே அரசியலமைப்புக்கான இருபதாம் திருத்தத்திலும் உள்வாங்குதல்