• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
SriLankan Airlines Ltd. சார்பில் மெல்பேர்ன் விமான நிலையத்தில் விமான எரிபொருள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை கையளித்தல்
- அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் விமான நிலையத்தில் SriLankan Airlines Ltd. சார்பில் விமான எரிபொருள் கொள்வனவு செய்யும் பொருட்டு வரையறுக்கப்பட்ட சருவதேச கேள்வி நடவடிக்கைமுறை பின்பற்றப்பட்டுள்ளது இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் விமான நிலையத்தில் SriLankan Airlines Ltd. சார்பில் விமான எரிபொருள் வழங்கும் ஒப்பந்தத்தை 18.47 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மொத்த மதிப்பீட்டுச் செலவில் M/s. Vitol Aviation BV கம்பனிக்கு கையளிக்கும் பொருட்டு சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.