• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய அளவிலான கமத்தொழில் பங்குடமைத் திட்டங்களின் கீழுள்ள அனைத்து கடன் திட்டங்கள் சார்பிலுமான வட்டி விகிதாசாரத்தை மீண்டும் நிர்ணயித்தலும் கமத்தொழில் சங்கிலித்திட்ட கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்யும் பங்குடமை / மேம்பாட்டு கம்பனிகளுக்கான சலுகைகளை விரிவுபடுத்துதலும் - சிறிய அளவிலான கமத்தொழில் பங்குடமைத் திட்டங்கள்
- கமத்தொழில் அபிவிருத்திக்கான சருவதேச நிதியத்தின் கீழும் இலங்கை அரசாங்கத்தின் நிதியத்தின் கீழும் செயற்படுத்தப்படும் சிறிய அளவிலான கமத்தொழில் பங்குடமைத் திட்டங்களின் கீழ் தற்போது வழங்கப்படும் கடன் வசதிகளை மேலும் விரிவுபடுத்தி பின்வரும் விதத்தில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் தேசிய செயற்பாட்டுக் குழுவினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் பிரகாரம் கமத்தொழில் அமைச்சரினால் இது சம்பந்தமாக சமர்ப்பித்த பின்வரும் விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

* சிறிய அளவிலான கமத்தொழில் பங்குடமைத் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து கடன் முறைகளுக்கான வருடாந்த வட்டி விகிதாசாரத்தை உடனடியாக செயல்வலுவுக்கு வரத்தக்கதாக 6.5 சதவீதமாக திருத்துதல் .

* கமத்தொழில் சங்கிலித்திட்ட கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்யும் பங்குடமை / மேம்பாட்டு கம்பனிகளுக்கு வருடாந்த வட்டி விகிதாசாரமான 6.5 இன் கீழ் 100,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் என்னும் உச்சத்தின் கீழ் சீராக்கல் கடன் வசதிகளை வழங்குதல்.

* கமத்தொழில் சங்கிலித்திட்ட கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்யும் பங்குடமை / மேம்பாட்டு கம்பனிகளுக்கு வழங்கப்படும் சீராக்கல் கடன் தொகையை 50,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களிலிருந்து 100,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்தல்.