• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உயிரின பல்வகைமை மற்றும் அதனோடு இணைந்த பாரம்பரிய அறிவு மற்றும் பழக்க வழக்கங்கள் தொடர்பான தேசிய கொள்கை மற்றும் திறமுறை
- உயிரின பல்வகைமையின் பாதுகாப்பு, நிலையான பாவனை மற்றும் அதன் நலன்கள் நியாயமான சாதாரண முறையில் பகிர்தல் என்பவற்றை நோக்காகக் கொண்டு உயிரின பல்வகைமை சமவாயத்தில் இலங்கை 1992 ஆம் ஆணடில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த சமவாயத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக உயிரின பல்வகைமை தொடர்பிலான கலாசார வேறுபாடு, உள்நாட்டு மக்கள் மற்றும் அவர்களிடமுள்ள பாரம்பரிய அறிவு, ஆக்கங்கள் மற்றும் பாவனை தொடர்பில் செயலாற்றுவதற்கும் அவற்றைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும் அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சுகாதார அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள பாரம்பரிய அறிவு மற்றும் பழக்க வழக்கங்கள் பற்றிய தேசிய நிபுணர்கள் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் உரிய சகல தரப்பினர்களினதும் பங்களிப்புடன் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் பிரேரிப்புகளைப் பெற்று தயாரிக்கப்பட்டுள்ள உயிரின பல்வகைமை மற்றும் அதனோடு இணைந்த பாரம்பரிய அறிவு மற்றும் பழக்க வழக்கங்கள் தொடர்பான தேசிய கொள்கை மற்றும் திறமுறை சுற்றாடல் அமைச்சரினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப் பட்டதோடு, இந்த கொள்கைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.