• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரையறுக்கப்பட்ட லங்கா சலுசல நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளின் மேம்பாடு
- வரையறுக்கப்பட்ட லங்கா சலுசல நிறுவனம் அரசாங்கத்தின் புதிய கைத்தொழில் மற்றும் வர்த்தக கொள்கைக்கு அமைவாக திறமுறை ரீதியில் ஐந்து (05) வருடகால கருத்திட்மொன்றை தயாரித்துள்ளதோடு, அரசாங்க துறைசார்ந்த நிறுவனங்களின் துணி வகைகளின் கேள்வி தொடர்பில் ஆராய்ந்து உள்நாட்டு துணி உற்பத்தியாளர்களை ஒன்றுபடுத்தி புதிய வர்த்தக அணுகுமுறையின் கீழ் செயலாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கிணங்க, வரையறுக்கப்பட்ட லங்கா சலுசல நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவது சம்பந்தமாக கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பானது அமைச்சரவை யினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அரசாங்க நிறுவனங்களினால் போட்டிகரமான கேள்வி நடவடிக்கைகளின் கீழ் சலுசல நிறுவனத்திடமிருந்தும் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களிடமிருந்தும் துணிவகைகளை கொள்வனவு செய்யும் போது 15 சதவீத முன்னுரிமையினை வழங்குவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.