• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சலசினெ தொலைக்காட்சி நிறுவனத்தை வரையறுக்கப்பட்ட பொறுப்புள்ள கம்பனியொன்றாக கூட்டிணைத்தல்
- 2020 செப்ரெம்பர் மாதம் 09 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புறம்பான வர்த்தக பிரிவொன்றாக செயலாற்றும் பொருட்டு சலசினெ தொலைக்காட்சி நிறுவனத்தை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துடன் இணைப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினதும் சலசினெ தொலைக்காட்சி நிறுவனத்தினதும் வர்த்தக நோக்கங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட தென்பதனால் வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிப்பட்ட மேலதிக விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சலசினெ தொலைக்காட்சி நிறுவனத்தை வரையறுக்கப்பட்ட பொறுப்புள்ள கம்பனியொன்றாக கூட்டிணைக்கும் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.