• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய மருந்துகள் ஒழுங்குறுத்துகை அதிகாரசபையின் புதிய கட்டடத்தொகுதி மற்றும் தேசிய மருந்துகள் தரப்பாதுகாப்பு ஆய்வுகூட நிர்மாணிப்பு உட்பட அதற்கென பிரேரிக்கப்பட்டுள்ள காணியை சுவீகரித்தல்
- தேசிய மருந்துகள் ஒழுங்குறுத்துகை அதிகாரசபையினால் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் எல்லைக் கோட்டு உற்பத்திகளின் ஒழுங்குறுத்துகை பணிகளை மிக வெற்றிகரமாக நடாத்திச் செல்கின்ற போதிலும் தரப் பரிசோதனையினை மேற்கொள்வதற்கு போதுமான வசதிகளுடன் நவீன தொழினுட்பத்துடன் கூடிய ஆய்வுகூடமொன்று இல்லாமை இந்த அதிகாரசபையின் ஒழுங்குறுத்துகை பணிகளை மிக பயனுள்ள வகையில் நிறைவேற்றுவதற்கு பெரும் தடையாக இனங்காணப்பட்டுள்ளது. அதேபோன்று அதிகாரசபையின் பணிகள் விரிவடைந்துள்ளதன் காரணமாக புதிதாக பதவியணியினரை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதோடு, நிலவும் இடவசதி போதுமானதாக இல்லாததன் காரணமாக தற்போதுள்ள இடவசதியினை துரிதமாக விஸ்தரிக்க வேண்டியுள்ளது. இதற்கிணங்க, திம்பிரிகஸ்ஸாய பிரதேச செயலகப் பிரிவின் கிருள கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள மில்கோ பிறைவேட் லிமிட்டட் நிறுவனத்திற்குச் சொந்தமான 13 ஏக்கர் காணியிருந்து 3 ஏக்கர் விஸ்திரணம் கொண்ட காணியை தேசிய மருந்துகள் ஒழுங்குறுத்துகை அதிகாரசபைக்காக சுவீகரிப்பதற்கும் தேசிய மருந்துகள் ஒழுங்குறுத்துகை அதிகாரசபைக்கான புதிய கட்டடத்தொகுதியையும் தேசிய மருந்துகள் தரப்பாதுகாப்பு ஆய்வுகூடத்தையும் இந்தக் காணியில் நிர்மாணிப்பதற்கும் சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.