• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதி தொழிலை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
- தற்போது காப்புறுதி ஒழுங்குறுத்துகை ஆணைக்குழு என்னும் பெயரில் அழைக்கப்படும் இலங்கை காப்புறுதி சபையை தாபித்தல் மற்றும் இலங்கையில் காப்புறுதி தொழிலை முழுமையாகவும் மற்றும் தூர நோக்குடனும் தொழில்சார் ரீதியில் நடாத்திச் செல்வதனை உறுதிப்படுத்தி காப்பீட்டு உரிமையாளர்களினதும் காப்பீட்டினை பெறக்கூடியவர்களினதும் உரிமையினை பாதுகாப்பதை நோக்கமாகவும் பொறுப்பாகவும் கொண்டு இலங்கை காப்புறுதி தொழிலின் அபிவிருத்திக்கு, மேற்பார்வைக்கு மற்றும் ஒழுங்குறுத்துகைக்கு ஏற்பாடுகளை உள்ளடக்கி முன்பு நடைமுறையிலிருந்த 1962 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சட்டத்திற்குப் பதிலாக 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதி தொழிலை ஒழுங்குபடுத்தல் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முன்பு நடைமுறையிலிருந்த சட்டத்தின் கீழ் 1990‑05‑15 ஆம் திகதியிடப்பட்டதும் 610/4ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை திருத்துவதற்கு புதிய சட்டத்தின் 16 ஆம் பிரிவுடன் வாசிக்கப்படவேண்டிய 112(3) ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சருக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் வௌியிடப்பட்டுள்ள 2019‑04‑08 ஆம் திகதியிடப்பட்டதும் 2118/1 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.