• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Edirisinghe Trust Investment (ETI) Limited கம்பனி தொடர்பிலான சனாதிபதி ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துதல்
- Edirisinghe Trust Investment (ETI) Limited கம்பனி தொடர்பில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் பிழையான செயற்பாடுகள், ஒழுங்கீனங்கள் மற்றும் முறைக்கேடுகள் பற்றி ஆராய்ந்து அறிக்கையிடும் பொருட்டு இளைப்பாறிய உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ரீ.சித்திரசிறி அவர்களின் தலைமையில் சனாதிபதி ஆணைக்குழுவொன்று அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் 2020‑01‑09 ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவானது அதன் அவதானிப்புரைகளையும் சிபாரிசுகளையும் உள்ளடக்கிய அறிக்கையினை 2020‑10‑06 ஆம் திகதியன்று அதிமேதகைய சனாதிபதி அவர்களுக்கு கையளித்துள்ளது. இநத ஆணைக்குழுவின் அவதானிப்புரைகள் மற்றும் சிபாரிசுகள் ஊடாக கம்பனிகள் சட்டம், நிதிக் கம்பனிகள் பற்றிய சட்டம், பணம் வௌ்ளைப்படுத்தல் சட்டம், நிதித் தகவல் பற்றி அறிக்கையிடும் சட்டம், காணிகளை வௌிநாட்டவர்களுக்கு உடைமை மாற்றும் சட்ட கட்டமைப்பு அதேபோன்று தண்டனைச் சட்டக்கோவையின் கீழான பிழைகள் பல நிகழ்ந்துள்ளமை பற்றி சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோன்று நிதிக் கம்பனிகளின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குறுத்துகை தொடர்பிலான இலங்கை மத்திய வங்கியின் வங்கி சாராத நிதி நிறுவன மேற்பார்வை திணைக்களத்தை முழுமையாக மறுசீரமைக்கும் தேவையும் கூட இந்த ஆணைக்குழுவின் அறிக்கையின் மூலம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இந்த விடயங்களின் பால் அமைச்சரவையின் கவனத்தை ஈர்த்து அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* Edirisinghe Trust Investment (ETI) Limited கம்பனி சம்பந்தமாக நிகழ்ந்துள்ளதென கூறப்படும் நிதி ரீதியிலானதும் சொத்துக்கள் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலானதுமான முறைக்கேடுகள் பற்றி மேற்போந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிபாரிசுகளை நடைமுறைபடுத்துவதற்கு சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு சட்டமா அதிபருக்கு தொடர்புபடுத்துதல்.

* இலங்கை மத்திய வங்கியின் வங்கி சாராத நிதி நிறுவன மேற்பார்வை திணைக்களத்தை முழுமையாக மறுசீரமைத்து நிதிக் கம்பனிகளை ஒழுங்குறுத்துவதற்கு புதிய நிதி ரீதியிலான கட்டமைப்பொன்றை தயாரிக்குமாறு நிதி அமைச்சுக்கு அறிவித்தல்.

* நீதி அமைச்சரின் ஊடாக இந்த ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் இதற்கமைய எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்பவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்.