• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு முறைமைகள் மற்றும் செயற்பாடுகளை எளிதாக்குதல்
- அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு நிலவும் சில தடைகளாக பின்வருவன இனங்காணப்பட்டுள்ளன.

* கொள்கை ரீதியிலான விடயங்கள் அல்லது ஒழுங்குறுத்துகை தேவைகள் அல்லாத பொதுவான விடயங்கள் சார்பில் சில நிறுவனங்களிடமிருந்தும் இறுதியில் அமைச்சரவையினதும் அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சுக்களினால் நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளமை.

* தனிப்பட்ட ஒப்பந்தக்காரர்களுக்கு செய்யப்படவேண்டிய கொடுப்பனவுகள் தாமதமடைவதன் காரணமாக அபிவிருத்தி பணிகளில் காலதாமதம் ஏற்படுகின்றமை அத்துடன் கருத்திட்ட செலவு அதிகரிக்கின்றமை.

இதற்கிணங்க, மேற்குறிப்பிட்ட காலதாமதங்களை இயலுமான வரை குறைத்துக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் பின்வருமாறு நடவடிக்கை எடுத்து அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.