• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்படுத்தல் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - கட்டம் 3 - வௌ்ளவத்தை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வடிவமைத்தல், நிர்மாணித்தல், செயற்படுத்துதல்
- ஆசிய அபிவிருத்தி வங்கியினதும் இலங்கை அரசாங்கத்தினதும் நிதியிடலின் கீழ் செயற்படுத்தப் படும் பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்படுத்தல் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் 3 ஆம் கட்டத்தின் கீழ் வௌ்ளவத்தை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வடிவமைத்து, நிர்மாணித்து, செயற்படுத்தும் கேள்வி சார்பில் தகைமைபெற்ற நிறுவனங்களிடமிருந்து சருவதேச போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் உரிய ஒப்பந்தத்தை M/s Power China Zhongnan Engineering Corporation Ltd,. மற்றும் M/s Beijing Enterprises Water Group Ltd,. (Power Beijing JV) கூட்டு தொழில்முயற்சிக்கு 20.96 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் மற்றும் 4.36 பில்லியன் இலங்கை ரூபா (VAT இன்றி) தொகைக்கு வழங்கும் பொருட்டு அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.