• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
20ml கரைசல் புட்டிகளுடன் 440mg கொண்ட Trastuzumab தடுப்பூசி 6,875 புட்டிகளை வழங்குவதற்கான கேள்வி
- சில வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் Trastuzumab மருந்தினை கொள்வனவு செய்வதற்கு போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 20ml கரைசல் புட்டிகளுடன் 440mg கொண்ட Trastuzumab தடுப்பூசி 6,875 புட்டிகளை வழங்குவதற்கான கேள்வியை துருக்கியின் M/s Transfarma Dis Ticaret Anonim Sirketi நிறுவனத்திற்கு மொத்த செலவு மற்றும் கேள்வு விலையான 1.62 மில்லியன் யூரோக்கள் கொண்ட தொகைக்கு கையளிக்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.