• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
11,250 Bevacizumab ஊசி மருந்து 100mg/4ml புட்டிகளை வழங்குவதற்கான கேள்வி
- சில வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் Bevacizumab மருந்தினை கொள்வனவு செய்வதற்கு போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளது. கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையின் சிபாரிசின் பிரகாரம் 11,250 Bevacizumab ஊசி மருந்து 100mg/4ml புட்டிகளை வழங்குவதற்கான கேள்வியை M/s. Medmart Pharma (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு மொத்த செலவான 196.88 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு கையளிக்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.