• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஊதுபத்தி உற்பத்திக்கான மூலப் பொருளாக பயன்படுத்தப்படும் விசேட மூங்கில் குச்சிகளை பெற்றுக் கொள்வது சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்தல்
- ஊதுபத்தி உற்பத்திக்கான மூலப் பொருளாக பயன்படுத்தப்படும் விசேட மூங்கில் குச்சிகளை பெற்றுக் கொள்வது சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பின்வருமாறு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* ஊதுபத்தி உற்பத்திக்கான மூலப் பொருளாக பயன்படுத்தப்படும் விசேட மூங்கில் குச்சிகள் உரிய தரத்தில் தேவையான அளவு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வரை உற்பத்திக்குத் தேவையான மூங்கில் குச்சிகளை வௌிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தல்.

* இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் மூங்கில் குச்சிகளுக்கு வரிச் சலுகை வழங்குதல்.

* இந்த விசேட வகை மூங்கில் தாவரம் (Bambusa aspera) உள்ள பிரதேசங்களை இனங்காணுதலும் இந்த தாவரத்தினை செய்கைப் பண்ணக் கூடிய காணிகளை இனங்கண்டு செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வனப் பாதுகாப்புத் திணைக்களம், கமநல அபிவிருத்தி திணைக்களம் மற்றும் மகாவலி அதிகாரசபை போன்றவற்றினால் தேவையான நடவடிக்கைகளை எடுத்தலும்.

* ஊதுபத்தி உற்பத்திக்கு விருத்தி செய்யப்பட்ட தொழினுட்ப துணைக் கருவிகளை அறிமுகப்படுத்தும் பொருட்டு கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பங்களிப்பினை பெற்றுக் கொள்தல்.