• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்படுத்தல் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - கட்டம் 3
- பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்படுத்தல் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கொழும்பு நகரத்தின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பிரதேசங்களில் நீர்வழங்கல் முறைமைகளை புனரமைத்தல், விரிவுபடுத்துதல் மற்றும் அறவீடுகள் இன்றி வழங்கப்படும் நீரினை மட்டுபடுத்துதல் மற்றும் கொழும்பு நகரத்தின் தெற்கு போஷாக்கு பிரதேசத்தில் கழிவுநீர் முகாமைத்துவ முறைமையினைப் புனரமைத்து விரிவுபடுத்துதல் என்பன மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்கீழ் கருத்திட்டங்களாவன 2012 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு ஒக்றோபர் வரை 24 மாத காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் 3 ஆம் கட்டத்தின் கீழ் இரண்டு கடன் வசதிகள் கிடைக்கப்பெறுவதோடு, அதன்கீழ் பின்வரும் கருத்திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன.

* கிருளப்பனை போஷாக்குப் பிரதேசத்திற்கான கழிவுநீர் நிலத்தில் பதிக்கும் குழாய், அழுத்தக் குழாய் மற்றும் பம்பி நிலையம் என்பவற்றை வழங்குதல்.

* வௌ்ளவத்தை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணித்தல்.

* கொழும்பு நகரத்தின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பிரதேசங்களில் நீர்வழங்கல் முறைமைகளை புனரமைத்தல், விரிவுபடுத்துதல் மற்றும் அறவீடுகள் இன்றி வழங்கப்படும் நீரினை மட்டுபடுத்துதல்.

* கொழும்பு மாநகர சபை கருத்திட்ட முகாமைத்துவ பிரிவுக்கு ஒத்தாசை நல்குவதற்காக வாகன மற்றும் அலுவலக உபகரண கொள்வனவு மற்றும் பயிற்சி செயலமர்வுகளை நடாத்துதல்.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் 3 ஆம் கட்டத்தின் கீழ் தற்போதைய கடன் வசதிகள் 2020 திசெம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளமையினால் இந்த கடன் வசதிகளை 2022 ஒக்றோபர் மாதம் 24 ஆம் திகதி வரை நீடிக்கும் பொருட்டு அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.