• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாகிஸ்தான் - இலங்கை வர்த்தக உடன்படிக்கையின் கீழ் பாஸ்மதி அரிசி இறக்குமதி செய்தல்
- பாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் தீர்வை சலுகையின் கீழ் பாஸ்மதி அரிசி 6,000 மெற்றிக்தொன் வருடாந்தம் இறக்குமதி செய்யும் சாத்தியம் நிலவுகின்றது. கடந்த காலப்பகுதியில் இந்த வசதியின் கீழ் பாஸ்மதி அரிசி இறக்குமதி செய்வதற்கு தனியார்துறையினருக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும் உரிய வகையைச் சாராத அரிசியினை இறக்குமதி செய்வது போன்ற பல்வேறுபட்ட முறைக்கேடுகள் நிகழ்ந்துள்ளமை பற்றி முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, வரையறுக்கப்பட்ட லங்கா ஜெனரல் டிரேடிங் கம்பனி மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் / லங்கா சதொச நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் ஊடாக மாத்திரம் இந்த வசதியின் கீழ் பாஸ்மதி அரிசி இறக்குமதி செய்யும் பொருட்டு வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.