• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துக்கள் சட்டத்தை திருத்துதல்
- பூகோள சுட்டெண்களாக மேம்படுத்தக்கூடிய உள்நாட்டு உற்பத்திகள் பல உள்ளதோடு, உள்நாட்டிலும் அதேபோன்ற வௌிநாட்டு சந்தையிலும் போலியானவை உள்ளதன் காரணமாக இத்தகைய உற்பத்திகள் கடும் போட்டி நிலையினை சந்திக்க நேர்ந்துள்ளது. ஆதலால் இத்தகைய உற்பத்திகளை பூகோள சுட்டெண்களாக இலங்கையில் பதிவு செய்வது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இலங்கையில் பூகோள சுட்டெண்களைப் பதிவு செய்வதற்கு விரிவானதும் விதித்துரைக்கப்பட்டதுமான சட்டக் கட்டமைப்பொன்றைத் தாபிப்பதற்கு இயலுமாகும் வகையில் 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துக்கள் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.