• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான புகையிரத ஒதுக்கு காணிகளில் குடியிருக்கும் புகையிரத ஊழியர்கள் சம்பந்தமாக நடவடிக்கை எடுத்தல்
- புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமாக சுமார் 14,000 ஏக்கர் ஒதுக்குக் காணிகள் உள்ளதோடு இவற்றில் சுமார் 10 சதவீதம் பல்வேறுபட்ட தரப்பினர்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. மீதி காணியின் சுமார் 80 சதவீதம் பல்வேறு தரப்பினர்களினால் அத்துமீறி பயன்படுத்துவதோடு, அவர்களுள் தற்போது புகையிரத திணைக்களத்தில் சேவை புரியும் ஊழியர்களும் அதேபோன்று இந்த திணைக்களத்தில் சேவை புரிந்து இளைப்பாறிய உத்தியோகத்தர்களும் உள்ளனர். வீடமைப்பு, வர்த்தக நிலையங்களை நிர்மாணித்தல், பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் போன்ற நோக்கங்களுக்காகவும் இந்தக் காணிகள் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சட்டத்திற்கு முரணாக இந்தக் காணிகளை தம் வசம் வைத்துள்ள புகையிரத ஊழியர்களை நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் வௌியேற்றியுள்ளதோடு, ஒழுக்காற்று நடவடிக்கைகளும் ஓய்வூதியம் இல்லாமல் ஆக்கப்பட்ட சந்தர்ப்பங்களும்கூட நிலவுகின்றன. இந்த விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்குச் சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக பின்வரும் அமைச்சர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு போக்குவரத்து அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* மாண்புமிகு காமினி லொக்குகே அவர்கள், போக்குவரத்து அமைச்சர் - (தலைவர்).

* மாண்புமிகு ஜனக்க பண்டார தென்னக்கோன் அவர்கள், அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்.

* மாண்புமிகு எஸ்.எம்.சந்திரசேன அவர்கள், காணி அமைச்சர்.

* மாண்புமிகு அஜித் நிவாட் கப்ரால் அவர்கள், நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர்.