• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் விடுதியொன்றை நிர்மாணிப்பதற்காக காணியினைக் குறித்தொதுக்குதல்
- தற்போது உயர்கல்விக்காக நிலவும் அதிகளவிலான கேள்வியின் காரணமாக பெரும்பாலான மாணவர்களை அரசாங்க பல்கலைக்கழகங்களில் உள்வாங்கு வதற்கு நிலவும் வாய்ப்பினை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் கொள்கையினை செயற்படுத்துவதற்கு அரசாங்க பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திகளை விரிவுபடுத்துவது அத்தியாவசியமானதாகும். கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் தற்போது பட்ட பாடநெறிகளுக்காக நடாத்திச் செல்லப்படும் துறைகளுக்கு மேலதிகமாக தேவையான மிக பொருத்தமான துறையொன்றில் பட்ட பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கு இயலுமாகும் வகையில் பதுளை மாவட்ட செயலாளர் வசமுள்ள பதுளை, கலுகல்பிட்டிய கிராமத்தில் அமைந்துள்ள காணியிலிருந்து 02 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணியினை இந்தப் பல்லைக்கழகத்திற்கு உடைமை மாற்றுவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.