• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு நகரிலும் ஏனைய தெரிவு செய்யப்பட்ட நகரங்களிலும் பல்மாடி வாகன தரிப்பிட நிர்மாணிப்புகளுடன் சேர்த்து கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
- நாளாந்தம் கொழும்பு நகரத்திற்கும் அதற்கண்மித்த நகரங்களுக்கும் வரும் வாகனங்களினாலும் வீதிகளின் இருபக்கத்திலும் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களினாலும் நேரிடும் நெரிசலை குறைப்பதற்காக திறந்த போட்டி கேள்வி நடவடிக்கைமுறையைப் பின்பற்றி தெரிவு செய்யப்படும் முதலீட்டாளர்களின் ஊடாக வாகனத் தரிப்பிடங்களை நிர்மாணித்து நடாத்திச் செல்வதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க பின்வரும் இரண்டு வழிமுறைகளின் கீழ் இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* அரசாங்க - தனியார் பங்குடமை கருத்திட்டமொன்றாக கொழும்பு நகரத்திலும் பத்தரமுல்லை, அநுராதபுரம் மற்றும் கண்டி ஆகிய நகரங்களிலும் 08 இடங்களில் வழமையான பல்மாடி வாகன தரிப்பிடங்களையும் இயந்திர தரிப்பிடங்களையும் நிர்மாணிப்பதற்கு தனியார் துறை முதலீட்டாளர்களிடமிருந்து பிரேரிப்புகளைக் கோருதல்.

* கருத்திட்டம் சார்பில் செலவாகும் தொகையினை கருத்திட்டத்தின் ஊடாகவே முன்விற்பனை மூலம் பிறப்பித்துக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் வீட்டு அலகுககள், அலுவலக இடவசதிகள் அடங்கலாக பிற பொருத்தமான கருத்திட்டங்களுடன் சேர்த்து நாராஹேன்பிட்ட, புறக்கோட்டை ரெலிகொம் வாகனத் தரிப்பிடம் பொழும்பு - 07, ஒட்டஸ் விளையாட்டுக் கழகம் அமைந்துள்ள காணியின் வாகனத் தரிப்பிடம், கொழும்பு - 07, கின்சி அவனியு போன்ற இடங்களில் வழமையான பல்மாடி வாகன தரிப்பிடங்களையும் இயந்திர தரிப்பிடங்களையும் நிர்மாணிப்பதற்கு பிரேரிப்புகளைக் கோருதல்.