• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வித்தியாலங்கார சர்வதேச பௌத்த மாநாட்டு மண்டபத்தை சேவை வழங்கும் நிலைக்கு கொண்டு வருதல்
- வித்தியாலங்கார சர்வதேச பௌத்த மாநாட்டு மண்டபத்தை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் சுமார் 1,200 மில்லியன் ரூபா செலவு செய்துள்ளதோடு, இந்த முதலீட்டின் அளவினையும் இந்த மாநாட்டு மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள உயர் வினைத்திறன் மிக்க தொழினுட்ப உபகரணங்களை உரிய வகையில் பேணுவதற்கு இயலுமாகும் வகையிலும் நம்பிக்கை பொறுப்புச் சபையொன்றை நியமிப்பதற்கு 2019 நவெம்பர் மாதம் 11 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, தயாரிக்கப்பட்டுள்ள நம்பிக்கை பொறுப்பு உறுதிக்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதோடு, இந்த நம்பிக்கை பொறுப்பு உறுதியின் முதற்தரப்பாக அரசாங்கத்தின் சார்பில் புத்தசாசனம் என்னும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவித்ததுடன் அமைச்சரவையினால் இதன் பொருட்டு உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.