• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அதிவேகப் பாதை முதலீட்டுக் கம்பனியைத் தாபித்தல்
- பொருளாதார விருத்திக்கான திறமுறைகளின் பிரதான அங்கமாக ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட வீதி வலையமைப்பொன்று இருப்பது அத்தியாவசியமானதென "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை பிரகடனத்தின் மூலம் தௌிவாக இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, ஏற்கனவே 100,000 கிலோ மீற்றர் கிராமிய வீதிகள் கருத்திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதோடு, மத்திய அதிவேகப் பாதையின் வேலைகளை பூர்த்தி செய்தல், ருவன்புர அதிவேகப் பாதையின் நிர்மாணிப்பு பணிகளை ஆரம்பித்தல் மற்றும் களனியவிலிருந்து அத்துருகிரியவரை தூண்களின் மீது செல்லும் அதிவேகப் பாதையின் பணிகளைப் பூர்த்தி செய்தல் என்பவற்றுக்கு அரசாங்கத்தினால் முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மற்றும் நிர்மாணிக்கப்படவுள்ள அதிவேகப் பாதைகளுக்கு நிதியிடுவதற்காக தேறிய உள்நாட்டு உற்பத்தியிலிருந்து சுமார் 0.5%-1% கொண்ட முதலீட்டினை அரசாங்க வரவு செலவுத்திட்டத்திலிருந்து ஏற்க நேரிடுமென தெரியவந்துள்ளது. அதிவேகப் பாதையினை பயன்படுத்துபவர்களிடமிருந்து அறவிடப்படும் கட்டணங் களிலிருந்து கிடைக்கப் பெறும் வருமானத்தையும் அதேபோன்று அதிவேகப் பாதையுடன் தொடர்புபட்ட பிற வருமானத்தினை ஈட்டும் வழிகளிலும் வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் அதிவேகப் பாதையினை நிர்மாணிப்பதற்குத் தேவையான நிதியினை குறித்த கம்பனியினால் சேகரிப்பதற்கு ஏற்றவாறு அனைத்து அதிவேகப் பாதைகளையும் கம்பனியொன்றின் கீழ் கொண்டுவந்து திறைசேரிச் செயலாளர் தனி உரிமையைக் கொண்டுள்ள கம்பனியொன்றாக கூட்டிணைக்கும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.