• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடல் அட்டைகள் (Sea-Cucumber) மற்றும் சங்கு (Conch Shells) போன்ற கடல்வாழ் உயிரினங்களை சேகரிப்பதற்காக வழங்கப்படும் முக்குளிப்பு அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக இரத்துச் செய்தல்

- கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் குடா நாட்டின் மேற்கு கரையோரப் பிரதேசத்தில் கடல் அட்டைகள் மற்றும் சங்கு போன்ற கடல்வாழ் உயிரினங்களை சேகரிப்பதற்காக விசேட முக்குளிப்பு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. இதற்கிணங்க, இந்த பணிகளில் ஈடுபடும் குழுக்கள் இந்த பிரதேசத்தின் கரையோரப் பகுதிகளில் தற்காலிகமாக குடியிருந்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நோக்கத்திற்காக அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள சில முக்குளிப்பாளர்கள் இந்த அனுமதியினை துஷ்பிரயோகம் செய்து குறித்த கடல் பிரதேசத்தில் ரோலர் இயந்திரங்களின் மூலம் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீனவர்களுடன் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை அறிக்கையிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக யாழ்ப்பாண குடா நாட்டைச் சேர்ந்த மக்களிடையே COVID - 19 தொற்று பரவும் கடும் ஆபத்து நிலவுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, கடல் அட்டைகள் மற்றும் சங்கு போன்ற கடல்வாழ் உயிரினங்களை சேகரிப்பதற்காக வழங்கப்படும் முக்குளிப்பு அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்தும் பொருட்டு கடற்றொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.