• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாடசாலையில் வகுப்பறையொன்றில் இருக்கவேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை

- தரம் 1 இற்கு மாணவர்களை சேர்ப்பதற்காக கல்வி அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை அறிவுறுத்தல்களுக்கு அமைவாக அதிபர்கள் செயலாற்றுகின்றனர். அதேபோன்று புலமைப் பரிசில் பரீட்சையில் காட்டும் திறனை அடிப்படையாகக் கொண்டு தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளின் 6 ஆம் தரத்திற்கு மாணவர்கள் சேர்க்கப்படுவதும் கல்விப் பொது தராதர சாதாரண தர தகைமையினை அடிப்படையாகக் கொண்டு உயர்தர வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவதும்கூட உரிய அதிபர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கு மேலதிகமாக 37/2008 ஆம் 33/2019 ஆம் இலக்கங்களைக் கொண்ட சுற்றறிக்கைகளின் பிரகாரம் பாடசாலை அதிபர்களின் உடன்பாட்டின் மீது இடைப்பட்ட வகுப்புகளுக்கும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதன் கீழ் இடமாற்றம் காரணாமக வதிவினை மாற்றுதல், வௌிநாடுகளிலிருந்து வருதல், பாராளுமன்றத்திற்கு தெரிவாதல், நீதிச் சேவையிலுள்ள நீதிபதிகள், அரசாங்க நிபுணத்துவ மருத்துவர்கள் மற்றும் அரசாங்க மருத்து உத்தியோகத்தர்கள், பாடசாலைகள், கல்வி மற்றும் அதனோடு இணைந்த திணைக்களங்களில் சேவை புரிபவர்கள், பல்கலைகழக விரிவுரையாளர்கள் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்கள் இலங்கை கல்வி நிருவாக சேவை மற்றும் ஆசிரியர் கல்வியியலாளர் சேவை ஆகியவற்றின் உத்தியாகத்தர்கள் ஆகியோர்களும் இடைப்பட்ட வகுப்புகளுக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கு தகைமை பெறுவர்.

அதேபோன்று மாணவர்களை சேர்க்கும் போது அநீதிக்கு ஆளாகி அது பற்றி மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் போது தகைமைபெறும், விசேட தேவைகளைக் கொண்ட மற்றும் சமூக நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் பிள்ளைகள் குழுவும் இந்த இடைப்பட்ட வகுப்புகளில் சேர்ப்பதற்கு தகைமை பெறுவர்.

இவ்வாறு மாணவர்களை சேர்ப்பதற்காக நிலவும் கடும் கேள்வியினைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு வகுப்பறையொன்றில் இருக்கவேண்டிய மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதற்கு இயலுமாகும் வகையில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் வழிமுறையினைத் திருத்தி வௌிப்படைத் தன்மைவாய்ந்த வழிமுறையொன்றினை அறிமுகப்படுத்தும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.