• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாடசாலை சீருடைத் துணிகளை கொள்வனவு செய்தல் - 2021

- உள்நாட்டு துணை உற்பத்தியாளர்களிடமிருந்து 2021 ஆம் ஆணடிற்குத் தேவையான பாடசாலை சீருடைத் துணிகளை கொள்வனவு செய்வதற்கும் இதற்கிணங்க, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பெறுகை செயற்பாட்டினை துரிதமாக பூர்த்தி செய்வதற்கும் 2020 செப்ரெம்பர் மாதம் 28 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு பாடசாலை சீருடைத் துணிகளை உரிய தகவுதிறன்களுக்கு அமைவாக உற்பத்தி செய்து, பிரித்து, பொதியிட்டு வலயக் கல்வி அலுவலகங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான ஒப்பந்தத்தை Vanguard Industries (Pvt.) Company, Dankotuwa Weaving Mills, Prabha Tex Industries and Creative Textile Mills (Pvt.) Company ஆகிய நிறுவனங்களுக்கு கையளிக்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.