• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2021 ஆம் நிதி ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

- 2021 ஆம் நிதி ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை வரையும் பொருட்டு 2020 செப்ரெம்பர் மாதம் 16 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க, 2021 ஆம் நிதி ஆண்டிற்காக மதிப்பிடப்பட்ட மீணடுவரும் செலவினம் 2,690 பில்லியன் ரூபா ஆவதோடு, மூலதனச் செலவுகள் 2,216 பில்லியன் ரூபாவாகும். சட்டவரைநரினால் வரையப்பட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்கமைவாக 2021 ஆம் நிதி ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.