• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறக்குமதி விமான சரக்கு முனைய கட்டடமொன்றை நிர்மாணித்தல் - கட்டம் - I

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறக்குமதி விமான சரக்கு முனைய கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கான I ஆம் கட்டத்தின் கேள்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் பொருட்டு 2019 மே மாதம் 07 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க, குறித்த கேள்வி சம்பந்தமாக போட்டிகரமான கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு உரிய ஒப்பந்தத்தை 2.37 பில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு Nawaloka Construction Ltd. நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.