• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Enoxaparin Sodium தடுப்பூசி 4,000 IU 0.4 மில்லி லீற்றர் நிரப்பப்பட்ட சிரிஞ்சர்கள் 160,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி

- இருதய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் Enoxaparin Sodium தடுப்பூசி 4,000 IU 0.4 மில்லி லீற்றர் நிரப்பப்பட்ட சிரிஞ்சர்கள் கொள்வனவு செய்வதற்கான கேள்வியானது M/s. ABC Pharma Services (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு 2020 சனவரி மாதம் 08 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க, உரிய கட்டளையானது 2020 பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி வழங்குநருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மருந்து வகையின் 160,000 சிரிஞ்சர்களுக்கான தேவை நிலவுகின்றதென பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு மீள் கட்டளையொன்றாக Enoxaparin Sodium தடுப்பூசி 4,000 IU 0.4 மில்லி லீற்றர் நிரப்பப்பட்ட சிரிஞ்சர்கள் 160,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியினை ஆரம்ப வழங்குநராக M/s. ABC Pharma Services (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு 126.96 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த செலவில் வழங்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.