• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மட்டக்களப்பு பொது நூலக கட்டடத் தொகுதியினை நிர்மாணித்தல்

- மட்டக்களப்பு மாநகர சபைக்குச் சொந்தமான பொது நூலக கட்டடத்தின் கீழ் மாடியின் வேலைகளை பூர்த்தி செய்வதற்கு 2018 செப்ரெம்பர் மாதம் 11 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த நிர்மாணிப்பு பணிகளுக்காக தேசிய ரீதியில் போட்டிகரமான கேள்வி கோரப்பட்டதோடு, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய ஒப்பந்தத்தை 214.07 மில்லியன் ரூபாவைக் கொண்ட (VAT இன்றி) தொகைக்கு M/s. Focus Marketing and Engineering Company (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.