• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
COVID - 19 தொற்றின் பின்னரான சுற்றுலாத்துறைக்கு உதவும் முகமான சலுகை நடவடிக்கைகளை நீடித்தல்

- COVID - 19 தொற்று நிலைமை காரணமாக வாழ்வாதாரத்தினை இழந்த இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் பதிவு செய்துள்ள சுற்றுலா வழிகாட்டுநர்கள் மற்றும் சுற்றுலா சாரதிகள் சார்பில் வழங்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் 186 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினை ஒதுக்குவதற்கு இந்த அதிகாரசபையானது நடவடிக்கை எடுத்துள்ளதோடு, குறித்த தொகையிலிருந்து சுற்றுலா வழிகாட்டுநர்கள் மற்றும் சுற்றுலா சாரதிகள் சார்பில் சலுகை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சலுகைகளை சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள பின்வரும் குழுக்களுக்கு வழங்கும் பொருட்டு சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 2020‑08‑31 ஆம் திகதியன்றுக்கு சலுகை பெறுவதற்காக கோரிக்கைகளை முன்வைத்துள்ள இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் அல்லது வேறு சுற்றுலாத்துறை சங்கங்களினால் பயிற்று விக்கப்பட்ட சுற்றுலாத்துறை சாரதிகள் / சுற்றுலாத்துறை பேருந்து சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் / டுக் டுக் முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் 'சபாரி' வாகன சாரதிகள் என்போர் சார்பில் ஒருவருக்கு ஒருதடவை மாத்திரம் செலுத்தப்படும் 15,000/- ரூபாவைக் கொண்ட தொகையினை செலுத்துதல்.

* மாகாண சபைகளினால் பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டுநர்கள் சார்பில் ஒருவருக்கு ஒருதடவை மாத்திரம் செலுத்தப்படும் 20,000/- ரூபாவைக் கொண்ட தொகையினை செலுத்துதல்.