• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிராந்திய கைத்தொழில் பேட்டைகளிலிருந்து கைத்தொழிற்சாலைகளைத் தாபிப்பதற்காக காணித் துண்டுகளை

- பிராந்திய கைத்தொழில் சேவைகள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு 10 கருத்திட்ட பிரேரிப்புகள் சார்பில் பத்து முதலீட்டாளர்களுக்கு பின்வருமாறு காணித் துண்டுகளை குறித்தொதுக்கும் பொருட்டு கைத்தொழில் அமைச்சின் கருத்திட்ட மதிப்பீட்டுக் குழுவானது சிபாரிசு செய்துள்ளது.

* புத்தள கைத்தொழில் பேட்டை சார்பில் நான்கு கருத்திட்ட பிரேரிப்புகள்.

* லக்‌ஷஉயன கைத்தொழில் பேட்டை சார்பில் இரண்டு கருத்திட்ட பிரேரிப்புகள்.

* நாலந்த எல்லாவெல, புத்தளம், கரந்தெனிய மற்றும் பட்டஅத்த கைத்தொழில் பேட்டைகள் சார்பில் கருத்திட்ட பிரேரிப்பு ஒன்று வீதம் .

உத்தேச கருத்திட்டங்களின் கீழ் உரிய முதலீட்டாளர்கள் சுமார் 1,144 மில்லியன் ரூபாவை முதலீடு செய்யவுள்ளதோடு, இதன் மூலம் சுமார் 555 நேரடி தொழில் வாய்ப்புகள் புதிதாக பிறப்பிக்கப்படும்.

இதற்கிணங்க, குறித்த பத்து முதலீட்டாளர்களுக்கு 35 வருட கால குத்தகை அடிப்படையில் காணித் துண்டுகளை குறித்தொதுக்கும் பொருட்டு கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.