• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் மாடுகள் அறுப்பதை தடைசெய்த

– கமத்தொழிலினை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தினை கொண்டுள்ள நாடொன்றாக இலங்கை கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு கால்நடை வளத்திலிருந்து கிடைக்கும் பங்களிப்பு பாரியதாகும். மாடுகள் அறுப்பது அதிகரித்துள்ளதன் காரணமாக மரபுவழி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது கால்நடை வளம் போதுமானதாக இல்லையெனவும் இறக்குமதி செய்யப்படும் பால்மா சார்பில் வௌிநாடுகளுக்கு செல்லும் பாரியளவிலான அந்நிய செலாவணியை குறைத்து கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் உள்நாட்டு பால் தொழிலை பலப்படுத்துவதற்கு போதுமான மாடுகள் வளம் இல்லாமை இந்த தொழிலின் அபிவிருத்திக்கு தடையாக உள்ளதெனவும் பல்வேறுபட்ட தரப்பினர்களினால் சுட்டிகாட்டப்பட்டுள்ளது. இந்த நிலைமையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* தற்போது நாட்டில் நடைமுறையிலுள்ள 1958 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விலங்குகள் சட்டம், 1893 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க கசாப்புக் கடைக்காரர் கட்டளைச் சட்டம் மற்றும் தொடர்புபட்ட ஏனைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் உட்பட மாடுகள் அறுப்பது தொடர்பில் உள்ளூராட்சி அதிகாரசபைகளினால் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய துணைச் சட்டங்கள் ஆகியவற்றைத் திருத்துவதற்கு உடனடியாக தேவையான நடவடிக்கையை எடுத்தல்.

* மாட்டிறைச்சி நுகர்கின்ற மக்களுக்குத் தேவையான இறைச்சியினை இறக்குமதி செய்து சலுகை விலையில் வழங்குவதற்கு தாமதமின்றி தேவையான நடவடிக்கையை எடுத்தல்.

* விவசாய நடவடிக்கைகளுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியாத முதுமை நிலையை அடைந்த மாடுகள் தொடர்பில் பொருத்தமான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்.

* இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு உட்பட்டு, இலங்கையில் மாடுகள் அறுப்பதை உடனடியாக செயல்வலுவுக்கு வரத்தக்கதாக தடைசெய்தல்.