• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் உதவியின் கீழ் இலங்கையின் மேற்குப் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்ட இலகுரக புகையிரத போக்குவரத்து முறைமை கருத்திட்டம்

- யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் உதவியின் கீழ் இலங்கையின் மேற்குப் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்ட இலகுரக புகையிரத போக்குவரத்து முறைமை கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் பின்வரும் காரணங்களின் மீது இந்தக் கருத்திட்டத்திலிருந்து எதிர்பார்க்கப்பட்ட பெறுபேற்றினை எய்தமுடியாதென அவதானிக்கப்பட்டுள்ளது.

* கருத்திட்டத்தின் ஆரம்ப திட்டமிடல் கட்டத்தில், தொழில் மற்றும் ஏனைய நோக்கங்கள் கருதி தனியார் வாகனங்களில் கொழும்புக்கு பிரயாணிப்பவர்களுக்கு சேவை வழங்கும் பொருட்டு மாற்று போக்குவரத்து மார்க்கமொன்றாக நிலத்திற்கு மேல் புகையிரத பாதையூடாக செல்லும் வசதிகளுடன்கூடிய இலகுரக புகையிரத போக்குவரத்து சேவையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டிருந்தது.

* ஆயினும், குறித்த இந்த திட்டத்தை மாற்றியமைத்து சுற்றாடலுக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய தூண்களின்மீது நிர்மாணிக்கப்படும் புகையிரத பாதை ஊடாக உத்தேச இலகுரக புகையிரத போக்குவரத்து முறைமையினை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஆரம்ப நடவடிக்கைகள் கடந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ளது.

* இந்த கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பெருமளவிலான வீடுகள் மற்றும் வ​ர்த்தக நிலையங்கள் இடித்தழிக்கவும் தூண்களின்மீது புகையிரத வீதி பாதையினை நிர்மாணிப்பதற்கு மிகக்கூடிய செலவினை ஏற்கவும் வேண்டிவருமென தெரியவந்துள்ளது.

* தமது தனிப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தி தொழில் மற்றும் ஏனைய நோக்கங்கள் கருதி கொழும்புக்கு பிரயாணிப்பதற்கான மாற்று போக்குவரத்து மார்க்கமொன்றாக அவர்களை கவர்ந்திழுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்ட உத்தேச இலகுரக புகையிரத போக்குவரத்து முறைமையின் ஊடாக எதிர்பார்த்தவாறு புகையிரத பயணிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கு சாத்தியமில்லையென அவதானிக்கப்பட்டது.

* பிரேரிக்கப்பட்ட இலகுரக புகையிரத போக்குவரத்து முறைமையானது நடைமுறைப்படுத்தப்படின், அதற்காக பாரிய தொழிற்பாட்டுச் செலவு உறப்பட வேண்டியிருக்குமென தெரியவந்துள்ளது.

இதற்கிணங்க, தற்போது இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ள விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரான போக்குவரத்து அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, மேற்குப் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள இலகுரக புகையிரத போக்குவரத்து முறைமை கருத்திட்டத்தை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.