• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
எட்டு (08) மாத காலத்திற்கு டீசல் இறக்குமதி செய்வதற்கான தவணைக்கால ஒப்பந்தம்

- அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 2020‑10‑05 ஆம் திகதியிலிருந்து 2021‑06‑14 ஆம் திகதிவரையிலான எட்டு (08) மாதக் காலப்பகுதிக்கு பின்வருமாறு டீசல் இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தினை வழங்கும் பொருட்டு வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 1,365,000 பெரல் டீசல் (0.05 உச்ச சல்பர் நூற்றுவீதம்) மற்றும் 315,000 பெரல் டீசல் (0.001 உச்ச சல்பர் நூற்றுவீதம்) கொள்வனவு செய்வதற்கு சிங்கப்பூர் M/s. Emirates National Oil கம்பனிக்கு வழங்குவதற்கும்.

* 1,120,000 பெரல் டீசல் (0.05 உச்ச சல்பர் நூற்றுவீதம்) கொள்வனவு செய்வதற்கு சிங்கப்பூர் M/s. Emirates National Oil கம்பனிக்கு வழங்குவதற்கும்.