• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வடமத்திய பிரதான கால்வாய் மற்றும் வடமேல் பிரதான கால்வாய் என்பவற்றினை நிர்மாணிப்பதற்கான பெறுகை செயற்பாடுகள்

- மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கட்டம் - 1 இற்கான நிர்மாணிப்பு கட்டம் - 2 இற்கான சாத்தியத்தகவாய்வு என்பன பொருட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 675 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட நிதியினை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்திட்டத்தின் கட்டம் - 1 இன் கீழ் 17 ஒப்பந்த பொதிகள் வழங்கப்படவுள்ளதோடு, அவற்றுள் 10 ஒப்பந்த பொதிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வடமத்திய பிரதான கால்வாய் மற்றும் வடமேல் பிரதான கால்வாய் என்பவற்றினை நிர்மாணிப்பதற்கான பெறுகை செயற்பாடுகளுக்கு உரியதாக நீர்ப்பாசன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* மஹகித்துல உட்செல்லும் சுரங்கம், மஹகித்துல மற்றும் மஹகிருல களஞ்சிய நீர்த்தேக்கங்களை நிர்மாணித்தல் மற்றும் மஹகித்துல நீர்த்தேக்கத்திலிருந்து மஹகிருல நீர்த்தேக்கம் வரையிலான நீரேந்து கால்வாயினை நிர்மாணிக்கும் ஒப்பந்தம் என்பன சார்பில் விலை மனுக்களை முன்வைத்துள்ள China CAMC Engineering Co. Ltd. கம்பனியுடனான இணக்கப்பேச்சுக்கள் மூலம் உடன்படும் விலைகளின்மீது இந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

* வடமத்திய மாகாணம் மற்றும் வட மாகாணத்தின் வவுனியா மாவட்டம் வரை நீர்ப்பாசனம் உட்பட குடிநீர் வழங்குவதற்காக நிர்மாணிக்கப்படும் 95.86 கிலோமீற்றர் நீளமான வடமத்திய பிரதான கால்வாய் நிர்மாணிக்கும் கருத்திட்டத்தின் மின்னேரியா, கிரிதலே, ஹுருளு வன ஒதுக்கம் மற்றும் சரணாலயம் ஊடாக நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள 28 கிலோமீற்றர் நீளமான சுரங்க பாதையினையினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்திற்கான விலையினை முன்வைத்துள்ள China State Construction Engineering Corporation Ltd. கம்பனியுடன் இணக்கப்பேச்சுக்கள் மூலம் உடன்படும் விலைகளின்மீது இந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்.