• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீதி நிருவாக செயல்முறையை பலப்படுத்துவதற்காக விசேட அலகொன்றை நீதி அமைச்சில் தாபித்தல்

– இலங்கையில் நீதிமன்ற செயற்பாட்டினுள் நிகழும் தாமதங்கள் காரணமாக அதில் சம்பந்தப்படுபவர்களுக்கும் அதேபோன்று நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாரிய பாதிப்பு நிகழ்கின்றமை தௌிவான விடயமொன்றாகும். 2016 ஆம் ஆண்டில் தேசிய சட்ட சம்மேளன குழுவினால் வழக்கு தாமதங்களுக்கு காரணமாய் அமையும் பல்வேறுபட்ட பிரச்சினைகள், இதன் காரணமாக ஏற்படும் பிரதிகூலமான பெறுபேறுகள் மற்றும் இதற்கான உத்தேச தீர்வுகள் என்பன தொடர்பிலான அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் நாட்டிலுள்ள நீதிமன்றங்கள் அனைத்திலும் முடிவுறாத வழக்குகள் 766,784 உள்ளதோடு, இந்த நிலைமைக்கு துரிதமாக மாற்று வழிகளை மேற்கொள்வது அத்தியாவசியமானதாகும்.

வழக்கு தாமதங்களுக்கு காரணமாய் அமையும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், சட்டமறுசீரமைப்பு, நீதிமன்ற தன்னியக்க செயற்பாடுகள் மற்றும் ஆற்றல் அபிவிருத்தி போன்ற ஆக்கக்கூறுகளின் மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சட்டத்துறை நிபுணர்களின் பங்களிப்புடன் 3 வருட காலத்திற்குள் நீதிமன்ற மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நீதி அமைச்சில் விசேட அலகொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.