• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்ட கோவையைத் திருத்துத

– நீதிமன்றங்களுக்கு சிறைக்கைதிகளை கொண்டு செல்கையில் அண்மையில் நிகழ்ந்த கவலைக்கிடமானதும் வன்முறையானதுமான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்கும் விதத்தில் சிறைத்தண்டனைக் கட்டளையினை நீடிப்பதற்காக சந்தேக நபர்களையோ அல்லது குற்றவாளிகளையோ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தும் தேவையினை நீக்குவதற்கு நீதவானுக்கு அதிகாரத்தினைக் கையளிக்கும் பொருட்டு 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்ட கோவையைத் திருத்துவதற்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் பாராளுமன்ற தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமையினால் அதன் பொருட்டு அங்கீகாரம் பெற முடியாமற் போயுள்ளது.

Covid – 19 தொற்று நிலைமையின் கீழ் எழுந்துள்ள புதிய போக்கினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு காணொளி முறையினை பயன்படுத்தி குற்றவாளிகளுக்கும் சந்தேகநபர்களுக்கும் நீதிமன்றத்தின் முன் ஆஜராகுவதற்கான வசதிகளை செய்வதற்கும் வேறுவொரு வழக்கின் நீதிமன்ற கட்டளையொன்றின் கீழ் ஏற்கனவே புனர்வாழ்வு பெற்றுவரும் குற்றவாளிகளுக்கும் சந்தேகநபர்களுக்கும் இத்தகைய வசதிகளை செய்வதற்கும் இயலுமாகும் வகையில் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்ட கோவையை மேலும் திருத்தும் பொருட்டும் அதற்கிணங்க சட்டத்தினை வரைவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.