• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020 / 2021 பெரும் போகத்தின்போது சுற்றாடல் நட்புறவுமிக்க உரம் மானியமாக வழங்கும் முன்னோடிக் கருத்திட்டம்

– இரசாயன உர மானிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2020 சிறுபோகத்திலிருந்து சேதன உரமானியம் வழங்கும் முன்னோடி கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக 250 மில்லியன் ரூபா நிதி ஏற்பாட்டினை ஒதுக்கும் பொருட்டு 2020 பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க 14 மாவட்டங்களில் சுமார் 25,000 ஹெக்டெயார் கொம்போஸ்ட், சேதன திரவ உரம் மற்றும் உயிரியல் உரம் என்பவற்றை பயன்படுத்தி நெல் செய்கை பண்ணப் பட்டுள்ளதோடு, அதன் மூலம் இரசாயன உரப் பாவனையை 30 சதவீதம் தொடக்கம் 50 சதவீதம் வரை குறைத்துக் கொள்வதற்கு இயலுமாகியுள்ளது. இந்த முன்னோடி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் மூலம் எய்தப்பட்ட வெற்றியினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, 2020 / 2021 பெரும் போகத்தின்போது 48,000 ஹெக்டெயார்கள் சுற்றாடல் நட்புறவுமிக்க உரம் பயன்படுத்தி நெல் செய்கை பண்ணுவதற்காக கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.