• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பேராதனை பல்கலைக்கழகமும் விலங்கு உற்பத்தி, சுகாதார திணைக்களமும் இணைந்து (கூட்டு முயற்சியாண்மை) ஐக்கிய இராச்சியத்தின் Royal Veterinary College உடன் One Health Poultry Hub கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ள

- ஐக்கிய இராச்சியத்தின் Royal Veterinary College உடன் பேராதனை பல்கலைக்கழகமும் விலங்கு உற்பத்தி, சுகாதார திணைக்களமும் இணைந்து (கூட்டு முயற்சியாண்மை) ஐக்கிய இராச்சியத்தின் உலகளாவிய சவால்களுக்கான ஆராய்ச்சி நிதியத்தின் நிதி பங்களிப்புடன் One Health Poultry Hub என்னும் ஆராய்ச்சி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியில் அபிவிருத்தியினை ஏற்படுத்துவதற்கும் உள்நாட்டு கோழி வளர்ப்பினை ஏற்றுமதி துறையின்பால் கொண்டு செல்கையில் எழும் பிரச்சினைகளை இனங்கண்டு தொழிநுட்ப மற்றும் மனிதவள அபிவிருத்தியின் மூலம் உற்பத்தி நடவடிக்கைகளை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு இந்த ஆராய்ச்சி கருத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. ஐக்கிய இராச்சியத்தின் உலகளாவிய சவால்களுக்கான ஆராய்ச்சி நிதியத்தினால் இந்த கருத்திட்டத்திற்கு 5 வருட காலத்திற்கு 700,000 பிரித்தானிய பவுன்கள் கொண்ட கொடையொன்றை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க உரிய தரப்பினர்களுக்கிடையில் குறிப்பிட்ட ஆராய்ச்சி கருத்திட்டத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையினை செய்துகொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.