• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிரிந்திஓயா நீர்வழங்கல் திட்டத்தின் பழைய நீர் சுத்திகரிப்பு பொறித்தொகுதிக்கான அவசர மேம்படுத்தல் கருத்திட்டத்தின் வேலைகளை பூர்த்தி செய்தல்

- கிரிந்திஓயா நீர்வழங்கல் திட்டத்தின் பழைய நீர் சுத்திகரிப்பு பொறித்தொகுதிக்கு அவசரமான மேம்படுத்தல் கருத்திட்டமானது 2019 ஆம் ஆண்டில் அப்போதைய வீடமைப்பு என்னும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சினால் அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. ஆயினும், இந்த கருத்திட்டத்தின் பணிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படாததோடு, தற்போது இதன் மொத்த முன்னேற்றமானது சுமார் 40 சதவீதமாகும். இந்த நிர்மாணிப்பு பணிகளின் பொருட்டு பழைய சுத்திகரிப்பு நிலையத்தின் தற்போதைய கொள்ளளவானது 50 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதோடு, இதன் காரணமாக பிரதேச மக்களுக்கு போதுமான நீர் பெற்றுக் கொள்ள முடியாமற் போயுள்ளதன் காரணமாக அவர்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். ஆதலால், இந்தக் கருத்திட்டத்தை துரிதமாக பூர்த்தி செய்யும் நோக்கில் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பினை தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபைக்கு கையளிப்பதற்கும் இதற்குத் தேவையான நிதி ஏற்பாட்டினை வழங்குவதற்குமாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமானவராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.