• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலன்நறுவை மாவட்டத்தில் புவியியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக அதிக ஆபத்தானதென அறிவிக்கப்பட்டுள்ள வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்கள் தொடர்பில் தொடர் நடவடிக்கை எடுத்த

- புவியியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக பொலன்நறுவை மாவட்டத்தின் ஹிங்குரக்கொட பிரதேச செயலாளர் பிரிவுக்குச் சொந்தமான ஆறு (06) கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 223 வீடுகளில் வழமைக்கு மாறாக சுவர்கள் வெடித்துள்ளதோடு, இந்த வீடுகள் உடைந்து விழும் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. இந்த வீடுகளிலிருந்து கடுமையாக சேதமடைந்துள்ளதும் குடியிருப்பதற்கு பொருத்தமற்றதெனவும் இனங்காணப்பட்டுள்ள 67 வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களை துரிதமாக வௌியேற்றி அவர்களை பொருத்தமான இடமொன்றில் குடியமர்த்தவேண்டியுள்ளது. இதற்கு முன்னர் மண்சரிவு ஆபத்து மிக்க வலயங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் பொருட்டிலான வழிமுறைக்கு 2017 யூன் மாதம் 27 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, அதற்கிணங்க இந்த குடும்பங்கள் சம்பந்தமாக தேவையான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு நீர்ப்பாசன அமைச்சரும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமானவர் சமர்ப்பித்த பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, பின்வருமாறு நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* ஆபத்து மிக்கதென இனங்காணப்பட்டுள்ள வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களை குறித்த வீடுகளிலிருந்து வௌியேற்றி வேறு பாதுகாப்பான இடமொன்றில் தற்காலிகமாக குடியமர்த்துதல்.

* இவ்வாறு குடியமர்த்தும் குடும்பமொன்றுக்கு ஒரு (01) மாதத்திற்கு 10,000/- ரூபா என்னும் உச்சத்தின் கீழ் ஆறு (06) மாதம் காலம் வரை வீட்டுக் கூலி கொடுப்பனவினை வழங்குதல்.

* நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுடன் வீடமைப்புத் திட்டமொன்றை துரிதமாக நடைமுறைப்படுத்தி வௌியேற்றப்படும் குடும்பங்களுக்கு இந்த வீடமைப்புத் திட்டத்திலிருந்து வீடுகளை வழங்குதல்.

* குறுகியகாலப் பகுதிக்குள் உத்தேச வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது போனால் 2017 யூன் மாதம் 27 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டவாறு மண்சரிவு ஆபத்து அதிகமாகவுள்ளதன் காரணமாக அவர்களுடைய குடியிருப்புகளிலிருந்து வௌியேற்றப்படும் குடும்பங்களை மீளக் குடியமர்த்தும் நிழ்க்சித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பின்வரும் சலுகைகளை ஹிங்குரக்கொட பிரதேச செயலாளர் பிரிவில் அனர்த்த நிலைமை காரணமாக குடியிருப்புகளிலிருந்து வௌியேற்றப்படும் குடும்பங்களுக்கு வழங்குதல்:

i. காணியுடன் வீடொன்றினை கொள்வனவு செய்வதற்காக 1.6 மில்லியன் ரூபா வழங்குதல்.

ii. காணியொன்றினை கொள்வனவு செய்து வீட்டினை நிர்மாணிப்பதற்காக காணி சார்பில் 0.4 மில்லியன் ரூபாவும் வீட்டினை நிர்மாணிப்பதற்கு 1.2 மில்லியன் ரூபாவும் வழங்குதல்.

iii. அரசாங்கம் காணி வழங்கியிருந்தால் அந்த காணியில் வீட்டினை நிர்மாணிப்பதற்காக 1.2 மில்லியன் ரூபாவும் வழங்குதல்.