• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மத்திய வங்கி சார்பில் ஒன்று முதல் இரண்டு வருடங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்கு ஐக்கிய அமெரிக்க டொலர் / இலங்கை ரூபாய் கொள்வனவு - விற்பனை கொடுத்து மாறல் வசதிகளை வழங்குதல்
- நாட்டிற்குள் அந்நிய செலாவணி பெருமளவில் வருவதை ஊக்குவிக்கும் நோக்கில் வதிவற்ற முதலீட்டாளர்களுக்கு அரசாங்கத்தின் பிணைப் பத்திரங்களிலும் ஏனைய துறைகளிலும் முதலீடு செய்வதற்கு இயலுமாகும் வகையில் ஏற்பாடு செய்யும் தேவையானது இலங்கை மத்திய வங்கியினால் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 'ஒன்று முதல் இரண்டு வருடங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்கு ஐக்கிய அமெரிக்க டொலர் / இலங்கை ரூபாய் கொள்வனவு - விற்பனை கொடுத்து மாறல்' வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க நடவடிக்கை எடுக்கும் போது அனுமதிபெற்ற வர்த்தக வங்கிகளுக்கு அந்நிய செலாவணி சார்ந்த தாக்கத்தினை வரையறுக்கும் நோக்கில் பின்வருமாறு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவையின் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.

* ஒரேமாதிரியான அந்நிய செலாவணி விகிதாசாரத்தின் கீழ் ஆரம்ப அந்நிய செலாவணி பரிமாறலையும் அதன் பின்னர் மேற்கொள்ளப்படும் பரிமாறல்களையும் செய்தல்.

* உரிய மூதலீடு காலவதியாவதற்கு முன்னர் செய்யப்படும் அந்நிய செலாவணி பரிமாறல்களுக்கு தண்டப்பணத்திற்கு உட்பட்டு அத்தருவாயில் உள்ள நாணயமாற்று விகிதத்தில் அந்நிய செலவாணி விகிதாசாரத்திற்கு குறித்த பரிமாறலை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குதல்.

* இந்த வசதியினை நாட்டிற்குள் அந்நிய செலாவணி பெருமளவில் வருமாயின் மாத்திரம் ஏற்புடைத்தாவதோடு, ஆகக்குறைந்தது 25 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களிருந்து ஆகக்கூடுதலாக 1,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரை மட்டுப்படுத்துதல்.

* இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஐக்கிய அமெரிக்க டொலர் / இலங்கை ரூபாய் நாணமாற்று விகிதத்தில் குறைவு ஏற்படுமாயின் இலங்கை மத்திய வங்கிக்கு ஏற்படக்கூடிய நட்டத்தினை பொதுத் திறைசேரியின் செலவொன்றாக கருதுவதற்கு இயலுமாகும் வகையில் எதிர்காலத்தில் இலங்கை மத்திய வங்கி அதன் பங்குலாபங்களை பொதுத் திறைசேரிக்கு மாற்றும் போது இழப்பை ஈடுசெய்தல்.