• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொரளை, எலியட் பிளேஸ் வீடமைப்புத் திட்டத்தின் மீதி வேலைகளை வடிவமைத்தல், நிர்மாணித்தல் மற்றும் நிதியிடல்
- அரசாங்க மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்படும் 400 வீட்டு அலகுககளைக் கொண்ட பொரளை, எலியட் பிளேஸ் வீடமைப்புத் திட்டத்தை வடிவமைத்தல், நிர்மாணித்தல் மற்றும் நிதியிடல் என்பவற்றுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்ட கம்பனியில் ஏற்பட்ட நிதிப் பிரச்சினை காரணமாக திட்டமிடப்பட்டவாறு கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமையினால் உரிய ஒப்பந்தமானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டம் முன்னுரிமைக் கருத்திட்டமொன்றாக இனங்காணப்பட்டுள்ளதோடு, கருத்திட்டத்தின் மீதி வேலைகளைப் பூர்த்தி செய்வதற்கு தேசிய ரீதியில் போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இந்த வீடுகளை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை M/s Access Engineering PLC நிறுவனத்திற்கு 9.37 மில்லியன் ரூபாவைக் கொண்ட (வரியின்றி) தொகைக்கு கையளிக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.