• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2005 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தைத் திருத்துதல்
- அனர்த்த முகாமைத்துவம் பற்றிய தொழில் சார்பாளர்களின் சிபாரிசுகள் மற்றும் பிரேரிப்புகள் அதேபோன்று கடந்த காலங்களில் நிகழ்ந்த அனர்த்தங்களின் போது கிடைக்கப்பெற்ற அனுபவங்கள் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு தற்காலத்திற்கு ஏற்ற விதத்தில் 2005 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தைத் திருத்தும் பொருட்டு சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு 2016 செப்ரெம்பர் மாதம் 13 ஆம் திகதியன்று வழங்கப்பட்டுள்ள அமைச்சரவை அங்கீகாரத்திற்கு அமைவாக சட்டவரைநரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் மண்சரிவு காரணமாக வீடுகள் சேதமடைந்த மற்றும் மண்சரிவு ஆபத்து காரணமாக அவர்களுடைய குடியிருப்புகளிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் அதே இடங்களில் குடியிருப்பது அவதானிக்கப்பட்டுள்ள மையினால் இந்த நிலைமையினை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென 2019 பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க ஏற்கனவே ஆக்கப்பட்டுவரும் திருத்த சட்டமூலத்திற்கு குறித்த ஏற்பாடுகளையும் உள்ளடக்கி 2005 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தைத் திருத்தும் பொருட்டு வரைவு சட்டமூல மொன்றினை தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீர்ப்பாசன அமைச்சரும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமானவர் சமர்ப்பித்த பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.