• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையினால் நடைமுறைப் படுத்தப்படும் பாரிய நீர்வழங்கல் மற்றும் மலக் கழிவகற்றல் கருத்திட்டம்
- தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் பின்வரும் பாரிய நீர்வழங்கல் மற்றும் மலக் கழிவகற்றல் கருத்திட்டங்களுக்கு வரிச்சட்டத்தின் கீழ் அறவிடப்படவேண்டிய வரிகளிலிருந்து விலக்களிப்பதற்கு இயலுமாகும் வகையில் இந்தக் கருத்திட்டங்களை விசேட கருத்திட்டங்களாக கருதி நடவடிக்கை எடுப்பதற்கும் இதற்கிணங்க, இந்தக் கருத்திட்டங்களுக்கான வசதிகளை ஏற்பாடு செய்வதற்குமாக நீர்வழங்கல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* ஹெம்மாதகம நீர்வழங்கல் கருத்திட்டம்

* ருவண்வெல்ல நீர்வழங்கல் கருத்திட்டம்

* யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நீர்வழங்கல் கருத்திட்டம்

* இரத்மலானை / மொறட்டுவை கழிவகற்றல் கருத்திட்டம்

* களுகங்கை நீர்வழங்கல் விரிவாக்க கருத்திட்டம்