• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டம்
- நாட்டில் வாழ்க்கைச் செலவினை நிலையாக பேணுவதற்குத் தேவையான கொள்கை ரீதியிலான மற்றும் நடைமுறை சார்ந்த தீர்வுகளை வழங்குவதற்கு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தின் முதலாவது கூட்டமானது அதிமேதகைய சனாதிபதி அவர்களின் தலைமையில் 2020 08 31 ஆம் திகதியன்று நடாத்தப்பட்டது. இதற்கிணங்க உணவுப் பொருட்கள் அடங்கலாக அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறையின்றி சந்தைக்கு வழங்கப்படுவதனை உறுதிப்படுத்துவதற்கும் வாழ்க்கைச் செலவினை நிலையாக பேணுவதனை ஒழுங்குறுத்தும் பொருட்டும் பின்வரும் விடயங்கள் சம்பந்தமாக இந்த உபகுழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வர்த்தக அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, குறித்த தீர்மானங்களின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவையின் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.

* வாழ்க்கைச் செலவினைக் குறைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் போது இந்த பிரச்சினை பாரிய அளிவில் பாதிக்கும் வகுதியினரின்பால் கூடுதல் கவனம் செலுத்துதல்.

* விவசாயிகளை பயிர்செய்வதற்கு ஊக்குவிப்பதற்கு இயலுமாகும் வகையில் நிலையான உள்நாட்டுக் கொள்கையொன்றைப் பேணுதலும் இதற்கிணங்க, இறக்குமதிகளை அத்தியாவசிய பொருட்களுக்கு மாத்திரம் வரையறுத்தலும்.

* இடைத் தரகர்களின் தலையீடு காரணமாக பொருட்களின் விலை அதிகரிக்கின்றமையினால் விவசாயிகளின் உற்பத்திக்கு உரிய விலையினைப் பெற்றுக் கொடுத்து நுகர்வோருக்கு நியாயமான விலையில் பொருட்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வழிமுறை யொன்றைத் தயாரித்தல்.

* உள்நாட்டில் பயிர்செய்யக்கூடிய உயர் தரம்வாய்ந்த விதை வகைகளின் பற்றாக்குறைக்கு மாற்று வழியாகவும் பாவனையிலிருந்து விலகிச் செல்லும் உள்நாட்டு விதை வகைகளை பாதுகாப்பதற்காகவும் விதை வங்கியொன்றினைத் தாபித்தல்.

* மரக்கறி மற்றும் பழ வகை உற்பத்திகளின் விலைகளை ஒழுங்குறுத்தி ஏற்கக்கூடிய விலையில் நுகர்வோருக்கு வினைத்திறனுடன் விநியோகிக்கும் வழிமுறையொன்றை நடைமுறைப்படுத்துதல்.

* விவசாயிகளின் உற்பதிகளை நேரடியாக கொள்வனவு செய்து நகரில் சனநெருக்கடி மிக்க இடங்களில் விற்பனை செய்வதற்கு பெருந்தோட்டத்துறை அமைச்சு, கமத்தொழில் அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சு ஆகிய அமைச்சுக்களின் தலைமையில் நிகழ்ச்சித்திட்ட மொன்றை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துதல்.

* உள்நாட்டில் பயிர்செய்யக்கூடிய மேலதிக பயிர்செய்கையின்பால் விவசாயிகள் தற்போது பாரிய அளவில் ஈடுபட்டுள்ளமையினால் அத்தகைய பயிர்களின் இறக்குமதியை இடைநிறுத்துவதற்கும் ஏனைய எமது நாட்டிற்கே உரிய உள்நாட்டு மரக்கறி வகைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் இறக்குமதி செய்யப்பட வேண்டிய பயிர் வகைகளுக்கு பதிலீடாக உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பயிர்களை ஊக்குவிப்பதற்கும் முன்னுரிமை அளித்தல்.

* பெரும்போகத்திற்கான நெல் அறுவடை சந்தைக்கு கிடைக்கும் வரை அரிசி விலை அதிகரிக்காதவாறு பாதுகாப்பான கையிருப்பினைப் பேணி அரசாங்கத்தினால் விதித்துரைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு சந்தையில் போதுமான அரிசி கையிருப்பு உள்ளமை தொடர்பில் உறுதிப்படுத்திக் கொள்ளல்.

* கோழி உணவு உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்கள் முக்கியமாக சோளம் இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளமையினால் சோள விலை அதிகரித்துள்ளதோடு, இதன் காரணமாக கோழி இறைச்சி, முட்டை என்பவற்றின் விலையும் அதிகரித்து செல்வதை கட்டுப்படுத்துவதற்கு சோளத்திற்குப் பதிலீடாக தற்காலிகமாக இறக்குமதி அனுமதிப்பத்திரத்தின் மீது கோதுமை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நாட்டில் சோள செய்கையை அதிகரிப்பதற்குத் தேவையான காணிகள், விதை, பசளை மற்றும் தேவையான தொழினுட்பங்களை வழங்குவதற்கு பொருத்தமான வேலைத்திட்டமொன்றை உரிய பொறுப்புக்கூறவேண்டிய நிறுவனங் களினால் துரிதமாக நடைமுறைப்படுத்துதல்.

* நுகர்வோருக்கு நியாயமான விலையில் மீன் கொள்வனவு செய்வதற்கு இயலுமாகும் வகையில் கடற்றொழில் கூட்டுத்தாபனம் அதன் விற்பனை நிலையங்களின் அளவினை அதிகரிக்க வேண்டுமென்பதோடு, புதிதாக திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள 40 விற்பனை நிலையங்களை துரிதமாக ஆரம்பித்தல்.

* உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதோடு, இதன் பொருட்டு தேவையான வசதிகளையும் தொழினுட்ப அறிவையும் பால் பண்ணையாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்.

* சந்தையில் தேங்காய் விலை அதிகரித்துச் செல்லும் போக்கினை காட்டுகின்றமையினால் நுகர்வோருக்கு சாதாரண விலையில் தேங்காயை கொள்வனவு செய்வதற்கு இயலுமாகும் வகையில் பெருந்தோட்டத்துறை அமைச்சினால சனநெரிசல் கூடிய நகரங்களில் தேங்காய் விற்பனை செய்யும் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்.