• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சனத்தொகை மற்றும் வீடமைப்பு தொகை மதிப்பு - 2021
- இலங்கையில் சனத்தொகை மற்றும் வீடமைப்பு தொகை மதிப்பானது பத்து வருடங்களுக்கு ஒருதடவை நடாத்தப்படுவதோடு, தொகைமதிப்பு கட்டளைச்சட்டத்தின் மூலம் கிடைக்கப் பெற்றுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக தொகைமதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தினால் அடுத்த தொகைமதிப்பானது 2021 ஆம் ஆண்டில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொகைமதிப்பின் ஊடாக தேசிய கொள்கை வகுப்பீட்டுக்கும் திட்டமிடலுக்கும் தேவையான மக்கள் தொகை, பூகோள பரவல், இனரீதியிலான பரவல் மற்றும் சனத்தொகையின் சமூகவியல் மற்றும் சமூகபோக்கு அதேபோன்று வீடுகள் என்பன தொடர்பிலான தரம் மிக்க நடைமுறைசார்ந்த தரவுகள் மற்றும் தகவல்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் வழங்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியிலும் நாட்டிலும் நிலவும் COVID - 19 தொற்று நிலைமை காரணமாக 'சனத்தொகை மற்றும் வீடமைப்பு தொகை மதிப்பு - 2021' இன் திட்ட நடவடிக்கைகளுக்கு தாக்கம் ஏற்பட்டமையினால் பின்வருமாறு இந்த தொகை மதிப்பு பணிகளை நடாத்துவதற்கு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 2020 யூலை மாதம் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்த இந்த தொகைமதிப்பின் பட்டியலிடல் கட்டத்திற்கான பணிகளை 2021 சனவரி மாத்திலிருந்து மே மாதம் வரை நடாத்துதல்.

* தொகைமதிப்பிடல் கட்டமானது 2021 யூன் மாதத்திலிருந்து நவெம்பர் மாதம் வரை நடாத்துதல்.

* தரவுகளை விளம்பரப்படுத்தல் 2021 நவெம்பர் மாதத்திலிருந்து 2022 மே மாதம் வரை மேற்கொள்தல்.

* தொகைமதிப்பு கட்டத்தில் திரட்டப்பட்ட தகவல்களின் செம்மைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டு நடாத்தப்படும் தொகைமதிப்புக்கு பின்னரான ஆய்வினை 2022 ஆம் ஆண்டிலே மேற்கொள்தல்.