• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2021 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை தயாரித்தல்
- பின்வரும் விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து 2021 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை தயாரிக்கும் போது பின்பற்றப்படும் கொள்கை கட்டமைப்பு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.

* 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்தின் மூலம் அரசாங்கத்தினால் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேற்றினை அடைவதற்குத் தேவையான வளங்களை ஒதுக்குதல்.

* அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் என்பவற்றுக்கு பணிகளை கையளிப்பதற்குரியதாக வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு உரிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையான வளங்களை ஒதுக்குதல்.

* அனைவருக்கும் குடிநீர் வழங்குதல், முழு நாட்டையும் தழுவும் விதத்தில் 100,000 கிலோமீற்றர் வீதி புனரமைப்பு மற்றும் விருத்தி செய்தல் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், நீர்வளம் அத்துடன் நீர்ப்பாசனம் போன்ற துறைகளுக்கு முன்னுரிமைம வழங்குதல்.

* அரச வருமானம் 2021 ஆம் ஆண்டில் தேறிய உள்நாட்டு உற்பத்தியின் சுமார் 10.2 சதவீதமாகுமென மதிப்பிடப்பட்டுள்ளமையினால் இந்த நிலைமையின் கீழ் செலவுகளை முகாமிக்கும் வழிமுறைகளை பின்பற்றி தொழில்முயற்சிகளை வெற்றிகொள்வதற்குத் தேவையான சூழலை உருவாக்கி அரச முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்திற்கு வளங்களை ஒதுக்குதல்.

* அரசாங்க பணிகளை மின்னணுமயப்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பினை வழங்குதல்

* குறைந்த வளங்களை பயன்படுத்தி மிகப் பயனுள்ள பெறுபேற்றினை அடைவதற்கு இயலுமாகும் வகையில் தற்போது நடைமுறையிலுள்ள வழிமுறையினை மீளாய்வு செய்து எளிமையான வழிமுறையின்பால் கொண்டு செல்தல் பற்றி கவனம் செலுத்துதல்.

இதற்கிணங்க, 2021 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை 2020 ஒக்ரோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேல் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு 2021 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை வரைவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.